கண்ணீர் அஞ்சலி

In loving memory of
Satkunantham Mahadevan
Age 44February 1, 1972 – May 30, 2016
- Born in
- Kokkuvil
- Lived in
- Bern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சற்குணானந்தம் மகாதேவன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
பாலர்பள்ளியில் தொடங்கிய நட்பு
கல்லூரியிலும் தொடர்ந்தது
காலத்தின் கோலத்தால் பிரிந்தோம்
மீண்டும் இரவல் ஊரில் இணைந்தோம்!
கள்ளமில்லா உன் முகத்தை
கட்டிலிலே கண்ட வேளை
கலங்கி நின்றே எண்ணிக் கொண்டோம்
கயவன் அந்த கடவுள் என்று
மனங்களின் சங்கமம்
மனிதர்க்கு புரிவதில்லை
நட்பு என்னும் சொல்லுக்கு
நண்பர்கள் நாம் உதாரணம்
நீ எம்மை விட்டுச் செல்லவில்லை
எம் நினைவுகளில் தங்கிவிட்டாய்!
நீ ஒரு முறைதான் மரணித்தாய்
உன் நினைவுகள் வரும் போது - நாம்
ஒவ்வொருமுறையும் மரணிப்போம்...!
எத்தனை பிறப்பெடுத்தாலும்
எம் நட்பு உன்னுடனே
உன் ஆத்மா சாந்தியடைய
தமிழ் அன்னை தயை புரிவாள்
என்றும் உன் பிரிவின் நினைவால்
துயறுரும் யாழ். வைத்தீஸ்வராக் கல்லூரி நண்பர்கள்
நந்தராஜ்(இத்தாலி), பாலேந்திரா(சுவிஸ்),
சதீஸ்குமார்(சுவிஸ்), இளங்கோ(சுவிஸ்), புவிச்சந்திரன்(ஜெர்மனி),
சிவகுமார்(ஜெர்மனி), மதிவண்ணன்(ஜெர்மனி).
— நண்பர்கள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

