1ம் ஆண்டு நினைவஞ்சலி

Selventhiran Adchayan
Age 15
Born in: KodikamamLived in: France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொடிகாமம் கோயிலாமனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வேந்திரன் அட்சயன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒரு தாயின் வயிற்றில் நாம் ஒன்றாய்ப் பிறந்தோம்
இன்று எம்மை தவிக்கவிட்டு எங்கே நீசென்றாய்?
உடன் பிறப்பே உன் உறவே உயர்ந்தென்று இருந்தோம்.
எம் உயிரிலும் உதிரத்திலும் ஒன்றாய் கலந்திருந்தோம்
பாதியிலே நீ எமைவிட்டுப்பிரிய நாம் துவண்டு விட்டோம்
புன்னகையோடு காணாமல் போனவனே
கண்ணீரோடு எம்மை தவிக்கவிட்டுச்சென்றாயே
வையகத்தில் நீ வளமோடு வாழ்வாய்
என வாஞ்சையுடன் நாங்கள்
கண்ட கனா ஏராளம்
அத்தனையும் நீ கனவாக்கி எங்கு சென்றாய்!
காலங்கள் தேய்திடுனும் உன் நினைவுகள் தேய்ந்திடுமோ?
உறவுகள் புலம்புகின்றன ஊரே உனை நினைத்து உருகுகின்றது
மீண்டும் வாராயோ உன் பிரிவால்
துவண்டு கிடக்கும் உள்ளங்களுக்கு ஆறுதல் தாராயோ?
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

