4ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sivanesarajah Balasubramaniyam
Age 55October 19, 1955 – March 29, 2011
- Born in
- Batti Periyaporathivu
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு பெரியபோரதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவநேசராஜா பாலசுப்பிரமணியம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் இதயத்து திருவிளக்கே
நான்கு ஆண்டுகள் கடக்கின்றது- ஆனால்
நான்கு நாட்கள் போல் தெரிகின்றதே!
வருடங்கள் உருண்டாலும்
வலியின் வாசம் மட்டும்
விழிக்கருவில் வடுபோல்
விலகாமல் என்றென்றும் உள்ளதே!
குடும்பத்தின் குலக்கொழுந்தாய்
இருந்த உன்னை இவ்வயதில்
பறிகொடுக்கும் துயர் வந்து
சேர்ந்தது எங்களுக்கு!
பெற்றவனே பிள்ளைக்கு
கொள்ளிவைக்கும் கொடுமையை
நீ தந்தாயே மகனே!!
காலமெல்லாம் கண்ணீரில்
மிதக்க விட்டு மறந்து போனதேனோ?
நீ பிறந்ததும், எம்மோடு வளர்ந்ததும்
கனவாகிப் போனதே
வாழ்ந்தவையாவும் நினைவாகி
நீ மறைந்தது மட்டும்
கனவாக இருக்கக் கூடாதா?
என்று உன்னையே
எண்ணித் தவிக்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

