3ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sivanesarajah Balasubramaniyam
Age 55October 19, 1955 – March 29, 2011
- Born in
- Batti Periyaporathivu
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு பெரியபோரதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவநேசராஜா பாலசுப்பிரமணியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன் புன்னகையை மொழியாக்கி
புவிதனிலே வாழ்ந்த
என் தலைமகனே
ஈசனவன் அழைத்திடவே
உலகைவிட்டு சென்றீரோ?
என் அன்பு மகனே..?
ஊமைகளாய் நாம் கலங்க
எமைவிட்டகன்று மூன்றாண்டானதுவே
ஏக்கங்கள் கலையவில்லை எம் மனதில்…
உன் நினைவலைகள்
ஐம்புலனும் இற்றைவரை உம்பிரிவை ஏற்கவில்லை….
ஒப்பற்ற உறவெனவே உலாவிய என் ஆசை மகனே
ஓலங்கள் அடங்கவில்லை உமை நினைக்கையில்
ஒளடதமாய் நெஞ்சுக்குள் நீரே வரனும் மீண்டும் மகனே!
நெஞ்சுருக்கும் செய்தியொன்று- நாம்
நொடிப் பொழுதில் அறிந்தோமண்ணா..
இடியென வந்த செய்தி - எம்
இதயத்தை சுட்டதண்ணா...
காலனவன் வென்றானென்று
கண்ணிமைக்கும் பொழுதினிலே
காற்றினிலே கலந்தாயண்ணா
இன்று குலவிளக்கு அணைந்ததென்று
ஊற்றெடுக்கும் விழிநீரால் - எம்
உதிரங்களே கண்ணீரால் வெதும்புதண்ணா..
நிழல் போன்று எங்கும் தொடர்ந்தாய்
நினைவை தந்து ஏன் சென்றாய்..?
கனவாய் தொலைந்தது ஆண்டு மூன்று
கரையுது இன்னும் விழியிரண்டு
உன்னோடான நினைவுகள் சுமையாய்
கணக்கின்றன மனதினிலே...
வலியோடு தவிக்கின்றோம் - புவிமீதில்
உன் நினைவோடு எந்நாளும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்
ஓம்சாந்தி...! ஓம்சாந்தி...!ஓம்சாந்தி
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

