31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Sivapragasam Parasakthy
Age 84May 2, 1934 – June 25, 2018
- Born in
- Pungudutivu 4th Ward
- Lived in
- Drancy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பராசக்தி சிவப்பிரகாசம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
சிவப்பிரகாசம் கரம்பிடித்த நாள் முதல் நல்ல குடும்பத்
தலைவியாய் வாழ்ந்தாய் அம்மா !
ஈரஞ்சு மாதம் சுமந்து எங்கள் அறுவரையும் பெற்ற நாள் முதல்
ஒப்பற்ற தாயாக திகழ்ந்தாய் அம்மா!
நின் கரம் பற்றி எங்கள் பிஞ்சுக் கரம்பிடித்து
நடந்த நடை அழகு!
புத்தாடை தைத்துப் போட்டு
அழகு பார்த்த கண்கள் அழகு!
தேரோடும் வீதியில் பூவோடும் பொட்டோடும்
நடந்த கால்கள் அழகு!!!
இவை அனைத்தும் எங்கள் அடிமனதில் நாள்தோறும்,
அலை மோதுகின்றது அம்மா!!
தங்களை இழந்து மாதம் ஒன்று தானம்மா
ஆனாலும் தினம் தினம் தங்களின் நினைவுகள் தானம்மா
காலனின் கணக்கு தப்பாமல் போனதோ? அம்மா
அதிகாலையில் சூரியனாய் கண்விழிக்க வைத்தாய் அம்மா!!!
நீல வான முழு நிலவாய் கட்டியணைத்தாய் அம்மா
நல்ல மொழிகள் சொல்லி உபதேசங்கள் செய்தாய் அம்மா!!!
இனி எப்போதான் இவைகளைக் காண்போம் அம்மா
தங்களின் நினைவால் தினந்தினம் அழுது வாடுகின்றோம் அம்மா!
அன்னாரின் மறைவுச் செய்திகேட்டு நேரில் வந்தவர்களுக்கும், தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியவர்களுக்கும், இறுதிக்கிரியையின் போது கலந்து கொண்டவர்களுக்கும், அன்னாரின் ஆத்ம சாந்திக்காய் மலர் அஞ்சலி
செய்து பிரார்த்தனை செய்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் உதவி புரிந்த நல்லுள்ளங்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

