ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

பராசக்தி சிவப்பிரகாசம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பராசக்தி சிவப்பிரகாசம்

வயது 842 மே, 1934 – 25 ஜூன், 2018

பிறந்த இடம்
புங்குடுதீவு 4ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
Drancy

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பராசக்தி சிவப்பிரகாசம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

சிவப்பிரகாசம் கரம்பிடித்த நாள் முதல் நல்ல குடும்பத்
தலைவியாய் வாழ்ந்தாய் அம்மா !
ஈரஞ்சு மாதம் சுமந்து எங்கள் அறுவரையும் பெற்ற நாள் முதல்
ஒப்பற்ற தாயாக திகழ்ந்தாய் அம்மா!
நின் கரம் பற்றி எங்கள் பிஞ்சுக் கரம்பிடித்து
நடந்த நடை அழகு!

புத்தாடை தைத்துப் போட்டு
அழகு பார்த்த கண்கள் அழகு!
தேரோடும் வீதியில் பூவோடும் பொட்டோடும்
நடந்த கால்கள் அழகு!!!
இவை அனைத்தும் எங்கள் அடிமனதில் நாள்தோறும்,
அலை மோதுகின்றது அம்மா!!

தங்களை இழந்து மாதம் ஒன்று தானம்மா
ஆனாலும் தினம் தினம் தங்களின் நினைவுகள் தானம்மா
காலனின் கணக்கு தப்பாமல் போனதோ? அம்மா
அதிகாலையில் சூரியனாய் கண்விழிக்க வைத்தாய் அம்மா!!!

நீல வான முழு நிலவாய் கட்டியணைத்தாய் அம்மா
நல்ல மொழிகள் சொல்லி உபதேசங்கள் செய்தாய் அம்மா!!!
இனி எப்போதான் இவைகளைக் காண்போம் அம்மா
தங்களின் நினைவால் தினந்தினம் அழுது வாடுகின்றோம் அம்மா!

அன்னாரின் மறைவுச் செய்திகேட்டு நேரில் வந்தவர்களுக்கும், தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியவர்களுக்கும், இறுதிக்கிரியையின் போது கலந்து கொண்டவர்களுக்கும், அன்னாரின் ஆத்ம சாந்திக்காய் மலர் அஞ்சலி
செய்து பிரார்த்தனை செய்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் உதவி புரிந்த நல்லுள்ளங்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 26 ஜூன், 2018மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.