1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Subramanium Sothilingam
Age 46March 14, 1963 – November 13, 2009
- Born in
- Allaippiddi
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஅல்லைப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜேர்மனி ஆகன் (Aachen) நகரை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சோதிலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நித்திய புன்னகை தம்பியே
உன் நெஞ்சு பூத்த முகமும்
கள்ளமில்லா புன்னகையும்
கனிவான உனது பேச்சும்
எங்களை விடுவதாக இல்லையடா தம்பி
துரத்திக் கொண்டே இருக்கிறது...
ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும்
ஆறாதையா உன் வதனம்.
அன்பு மொழி பேசி வெள்ளிச் சிரிப்பால்
எம்மை கொள்ளையடித்து விடுவாயே!!
ஆயுள் உள்ள வரைக்கும்
எம்முள்ளே உன் நினைவு உலாவுமடா...
எல்லாமே இருந்தும் உன்னை
இழக்க வேண்டி வந்ததே!!
கடைக் குட்டியாக வந்துதித்த
உன் முகம் தான்
எங்கள் குடும்பத்தின் ராசி
உதட்டில் சிரிப்பு உதிர்த்த
வண்ணம் உள்ளதெல்லாம்
சொல்லி பேசிடுவாய்
இப்படி எத்தனையோ
சொல்லி பேச இதயம்
துடிக்கிறது உன் பாசம் தடுக்கிறது...
உனது ஆத்மா சாந்தியடைய
அல்லப்பிட்டி மூன்று முடி
அம்மனை வேண்டுகிறோம்...
சொந்தங்கள் மட்டுமல்ல
ஆகன் வாழ் மக்களும் உனக்காக
சாந்தி!!! சாந்தி!!! சாந்தி!!!
— சகோதரர்கள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

