31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Thamotharampillai Loganathan
Age 69February 24, 1946 – November 27, 2015
- Born in
- Kachcheri
- Lived in
- Kachcheri
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தாமோதரம்பிள்ளை லோகநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
எங்கள் அக்காவின் அன்பு நிறைந்த
அருமைக் கணவர் எங்களின் அன்பு அத்தான்
எங்கள் குடும்பங்களின் ஆனந்தமான வாழ்விற்கு
ஆணி வேரானீர்கள்!
எங்கள் அக்காவின் மலர்ந்த முகத்திற்கும்
அழகுச் சிரிப்பிற்கும் அதிபதியானீர்கள்!
இசையின் ரசிப்பினில் கோடீஸ்வரர் ஆனீர்கள்!
அருமை மகனை இழந்திட்ட போதிலும்
கொண்ட கொள்கையில் தடம் பதித்து வாழ்ந்தீர்கள்!
உலகவல நடப்புகளை உள்ளறிந்து கொள்வீர்கள்!
உங்களுக்குள் எத்தனை திறமைகள்
அன்பாக பேசுவதும் பண்பாகப் பழகுவதிலும்
நட்பைப் பேணுவதிலும் வல்லவரும் நீங்கள் தான்!
கண்ணியம் மிக்கவராய்
காருண்யம் நிறைந்தவராய்
அன்பான மனைவி பிள்ளைகள் மருமக்கள்
பேரப்பிள்ளைகள் பெறாமக்கள் சொந்தங்கள்
பந்தங்களென்று உன்னதமான வாழ்வுதனை
வாழ்ந்து வாழ்வினில் வெற்றி கண்டீர்கள்!
உங்களால் நாமும் பெருமைப்பட்டோம்
இப்போது கலங்கி நிற்கிறோம்!
எப்போதும் எம் மனதில் உயர்வாய் நின்றீர்கள்!
என்றுமே எமை விட்டுப் பிரியாதிருப்பீர்கள்
என்றுமே எங்கள் அத்தான் சிகரத்தின் உச்சிக்கும்
ஓர் படி மேலே தான்!
கார்த்திகைப் பூக்கள் மகிழ்ந்து கொள்ளும் நாளில்
கண்மூடி மீளாத்துயில் கொண்டீர்கள்
நிச்சயம் உங்கள் ஆத்மா சாந்திபெறும் அமைதி பெறும்
எம்வாழ் நாள் உள்ள வரை உங்களின்
அழியாத நினைவுகளோடும்
உங்களை இழந்த தீராத துயரத்தோடும்
மைத்துனர்மார் மைத்துனிமார்.
எங்கள் அத்தானின் நினைவுப் பகிர்வை
ரமணா என்ற தலைப்புடன் உதயன் பத்திரிக்கை வாயிலாக
வெளிக் கொணர்ந்த திரு. சிதம்பர திருச்செந்திநாதன் அவர்களுக்கு
எங்கள் மனமார்ந்த நன்றிகளையும் எமது அன்பினையும்
தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

