ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

தாமோதரம்பிள்ளை லோகநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தாமோதரம்பிள்ளை லோகநாதன்

வயது 6924 பிப்ரவரி, 1946 – 27 நவம்பர், 2015

பிறந்த இடம்
Kachcheri
வாழ்ந்த இடம்
Kachcheri

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தாமோதரம்பிள்ளை லோகநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

எங்கள் அக்காவின் அன்பு நிறைந்த
அருமைக் கணவர் எங்களின் அன்பு அத்தான்
எங்கள் குடும்பங்களின் ஆனந்தமான வாழ்விற்கு
ஆணி வேரானீர்கள்!

எங்கள் அக்காவின் மலர்ந்த முகத்திற்கும்
அழகுச் சிரிப்பிற்கும் அதிபதியானீர்கள்!
இசையின் ரசிப்பினில் கோடீஸ்வரர் ஆனீர்கள்!

அருமை மகனை இழந்திட்ட போதிலும்
கொண்ட கொள்கையில் தடம் பதித்து வாழ்ந்தீர்கள்!
உலகவல நடப்புகளை உள்ளறிந்து கொள்வீர்கள்!

உங்களுக்குள் எத்தனை திறமைகள்
அன்பாக பேசுவதும் பண்பாகப் பழகுவதிலும்
நட்பைப் பேணுவதிலும் வல்லவரும் நீங்கள் தான்!

கண்ணியம் மிக்கவராய்
காருண்யம் நிறைந்தவராய்
அன்பான மனைவி பிள்ளைகள் மருமக்கள்
பேரப்பிள்ளைகள் பெறாமக்கள் சொந்தங்கள்
பந்தங்களென்று உன்னதமான வாழ்வுதனை
வாழ்ந்து வாழ்வினில் வெற்றி கண்டீர்கள்!

உங்களால் நாமும் பெருமைப்பட்டோம்
இப்போது கலங்கி நிற்கிறோம்!

எப்போதும் எம் மனதில் உயர்வாய் நின்றீர்கள்!
என்றுமே எமை விட்டுப் பிரியாதிருப்பீர்கள்
என்றுமே எங்கள் அத்தான் சிகரத்தின் உச்சிக்கும்
ஓர் படி மேலே தான்!

கார்த்திகைப் பூக்கள் மகிழ்ந்து கொள்ளும் நாளில்
கண்மூடி மீளாத்துயில் கொண்டீர்கள்
நிச்சயம் உங்கள் ஆத்மா சாந்திபெறும் அமைதி பெறும்

எம்வாழ் நாள் உள்ள வரை உங்களின்
அழியாத நினைவுகளோடும்
உங்களை இழந்த தீராத துயரத்தோடும்
மைத்துனர்மார் மைத்துனிமார்.

எங்கள் அத்தானின் நினைவுப் பகிர்வை
ரமணா என்ற தலைப்புடன் உதயன் பத்திரிக்கை வாயிலாக
வெளிக் கொணர்ந்த திரு. சிதம்பர திருச்செந்திநாதன் அவர்களுக்கு
எங்கள் மனமார்ந்த நன்றிகளையும் எமது அன்பினையும்
தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!!

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 27 நவம்பர், 2015மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 26 நவம்பர், 20161ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.