ஆறுதல்.கொம்


மரண அறிவித்தல் பற்றிய தகவல்கள்

உங்கள் உறவினர், நண்பர், சுற்றத்தார் ஆகியோரின் இறப்பிற்கான தகவலை உலகமெங்கும் பரந்து வாழும் உங்கள் உறவுகளை சென்றடைய மரண அறிவித்தலை ஆறுதல்.கொம்மில் பிரசுரிக்கலாம், அதற்காக இப்பக்கத்தில் விளக்கமாக தகவல்களை தந்துள்ளோம், மேலதிக தகவல்கள் தேவைப்படின் எம்மை தொடர்பு கொள்ளவும்.


தேவையானவை
 • உங்கள் வீட்டு தொலைபேசி இலக்கம்
 • உங்கள் முழுப் பெயர்
 • இறந்தவரின் புகைப்படம் (இல்லையெனில் பூ படம் பிரசுரிக்கப்படும்)
 • முழுவடிவ அறிவித்தலுக்குரிய தகவல்
 • பணம் கட்டிய பின் உறுதி செய்த பற்றுச்சீட்டு அல்லது இலக்கம்

எவ்வாறு பணம் செலுத்துவது?
 • Credit Card, Debit Card ஆகிய வழிகளில் பணத்தை செலுத்த முடியும்.
 • இப்பக்கத்திலுள்ள விலை விபரத்திற்கு கீழ் Order என்பதை அழுத்தி எந்த வகையில் பணம் செலுத்த விரும்புகின்றீர்களோ அதனை தெரிவு செய்து செலுத்தமுடியும்

எவ்வாறு தகவல்கள் அனுப்புவது?
 • [email protected] என்ற மின்னஞ்சல் வழியாக புகைப்படம், தகவலை அனுப்பி வைக்கலாம்
 • புகைப்படத்தை Scan (ஸ்கான்) செய்து மின்னஞ்சல் [email protected] வழியாக அனுப்பி விடலாம்.
 • அறிவித்தலை (தகவல்) நீங்களே தட்டச்சு செய்து அனுப்பலாம், இல்லையெனில் ஒரு வெள்ளை நிற பேப்பரில் தெளிவான எழுத்தில் எழுதி அதனை Scan (ஸ்கான்) செய்து மின்னஞ்சலில் அனுப்பி விடலாம்.
 • உங்களிடத்தில் Whatsapp & Viber வசதிகள் இருந்தால் அறிவித்தலுக்கான விபரங்களை படம் பிடித்து எமது Whatsapp & Viber இலக்கங்களில் அனுப்பலாம்.
 • நினைவஞ்சலிகளை பொறுத்தவரை கவிதைகளை எழுதி அனுப்பலாம் இல்லாவிட்டால் நாங்களே உங்களுக்காக பொருத்தமான கவிதை ஒன்றை எழுதி பிரசுரிப்போம்.
 • வீடியோவை பொருத்தமட்டில் ஒருமுறை பிரசுரித்தபின்பு மாற்றம் செய்ய இயலாது.

பிரசுரிக்க தேவைப்படும் நேரம்?
 • கூடியது நீங்கள் பணம், தகவல், புகைப்படம் ஆகிய அனைத்தும் அனுப்பி எமக்கு கிடைக்கப் பெற்ற நேரத்திலிருந்து 30 நிமிடத்திற்குள் பிரசுரிக்கப்படும். Publishing Time வேலை குறைந்த பட்சத்தில் 15 நிமிடங்களிலும் பிரசுரிக்க வாய்ப்புள்ளது. பிரசுரிக்கும் சராசரி நேரம்: 60 நிமிடம்
 • தகவல் தருபவரின் விபரங்கள் பாதுகாப்பு கருதி நாம் உறுதிப்படுத்திய பின்னரே பிரசுரிக்கப்படும்.
 • நீங்கள் எமக்கு வழங்கிய தகவலின்படி உறுதிப்படுத்த தாமதம் ஏற்படின் பிரசுரிக்கும் நேரம் அதிகரிக்கலாம்.

திருத்தம் செய்வது எப்படி?
 • பிரசுரித்த பின்னர் ஏதாவது திருத்தங்கள் இருப்பின் எமக்கு தகவல் தந்த நபர் மட்டுமே திருத்தம் செய்ய தகுதியுடையவர்.
 • தகவல் தருபவரின் மின்னஞ்சலுக்கு எம்மால் பாதுகாப்பு இலக்கம் ஒன்று அனுப்பப்படும், அவ் இலக்கத்தை எமக்கு தருவதன் மூலம் அறிவித்தலை திருத்திக்கொள்ளலாம்.
 • இல்லையெனில் அறிவித்தல் எந்த மின்னஞ்சலில் இருந்து அனுப்பப்பட்டதோ திருத்தம் செய்வதற்குரிய தகவல்களை அந்த மின்னஞ்சலூடாக தருகையில் திருத்தம் செய்யலாம்.
 • முகவரின் உதவியினை பாவித்து அனுப்பும் எந்த ஒரு மரண அறிவித்தல்களும் திருத்தித்தரப்படமாட்டாது.
 • நாங்கள் வடிவமைக்கும் அறிவித்தலில் திருத்தம் இருப்பின் நீங்கள் எமது வாடிக்கையாளர் சேவையினருடன் தொடர்பு கொண்டு எம்மால் பாதுகாப்பு இலக்கம் ஒன்று அனுப்பப்படும், அவ் இலக்கத்தை எமக்கு தருவதன் மூலம் அறிவித்தலை எத்தனை முறை வெண்டுமானாலும் திருத்திக்கொள்ளலாம்.
Terms & Conditions
 • அறிவித்தலில் எந்தவொரு விளம்பரமும் அனுமதிக்கப்பட மாட்டாது.
 • இணையத்தள இணைப்பு, மின்னஞ்சல் முகவரியினை கொடுப்பதற்கு அனுமதி இல்லை
 • அறிவித்தலுக்கான தகவல் மட்டுமே அனுமதிக்கப்படும், அறிவித்தலில் வேறு தகவலை இணைப்பது அனுமதிக்கப்படமாட்டாது
 • நாம் பிரசுரிப்பதில் எழுத்துப் பிழைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், அவற்றை தொடர்பு கொண்டு திருத்திக்கொள்ளலாம்
 • எமக்கு தகவல் தருபவரின் விபரம் தெளிவற்று இருந்தாலோ, உறுதிசெய்வதில் சிக்கல் இருந்தாலோ அவ்வறிவித்தல் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது
 • குறைந்தது ஒருவருடைய தொலைபேசி இலக்கமாவது தகவலுடன் இணைக்கப்பட வேண்டும்
 • அறிவித்தல் பக்கத்திலிருந்து அனுதாபச் செய்திகளை தகவல் தருபவரின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும், மாற்றம் செய்வதாயின் அறியத்தரவேண்டும்
 • தொழிநுட்பச் சிக்கல் ஏதேனும் ஏற்படின் அறிவித்தல் பிரசுரிப்பதில் தாமதம் ஏற்படலாம்
 • நீங்கள் அனுப்பி பிரசுரித்த அறிவித்தலுக்கு முழுக்க முழுக்க பொறுப்பு உங்களுடையது
 • உங்கள் தகவல்களில் சந்தேகமிருப்பின் உங்களை உறுதி செய்ய உங்களை அடையாளப்படுத்த வேண்டிய நிலமை வரலாம். அச்சந்தர்ப்பத்தில் ID Card, Passport Copy, Billing Proof இப்படியான ஆவணங்களை நாம் பெற்றுக்கொள்ளுவோம்.