மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிறிஸ்ரபெல் சிரானி செபஸ்ரியம்பிள்ளை
வயது 4717 மே, 1972 – 28 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, ஆனைக்கோட்டை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், யாழ். ஆனைக்கோட்டையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கிறிஸ்ரபெல் சிரானி செபஸ்ரியம்பிள்ளை அவர்கள் 28-10-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியம்பிள்ளை மேரி வினிபிரட்(பேபி) தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,
ஷாமினி(கனடா), அன்ரன்(கனடா), தர்சினி(ஜேர்மனி), கிருபா(கனடா), டிலானி(கனடா), தேவா(கனடா), பற்றிக்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
யோகராஜா(கனடா), பிறேமளா(கனடா), காலஞ்சென்ற றஞ்சன், மஞ்சுளா(கனடா), ராஜ்குமார்(கனடா), நயனி(கனடா), மைதிலி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற கிறிஸ்ரின், மேசி(கொழும்பு), யூலியற்(கொழும்பு), யசிந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் பெறாமகளும்,
காலஞ்சென்றவர்களான நேசம்மா, திரேசம்மா, அன்னம்மா, எலிசம்மா, ஸ்ரெலா ஆகியோரின் அன்பு மருமகளும்,
ஞானப்பிரகாசம், சுவாம்பிள்ளை, சவரிமுத்து ஆகியோரின் சிறியமகளும்,
நிரோஜா, கிமோசன், அனோசன், பெனி ஆகியோரின் அன்புச் சித்தியும்,
மெசான், ரம்யா, றொசான், சரண்யா, றவீன், சமில்ற்றன், சஞ்சய், ஹரிசன், கிரிஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 31-10-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இல. 23, M M School Lane உயரப்புலம், ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் இருந்து இளவாலை புனித அன்னம்மாள் ஆலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு மு.ப 10:30 மணியளவில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித அன்னம்மாள் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியும் மிகவும் படிப்பாளிகளாகவும், பண்பாளராகவும் விளங்கும் யாழ்ப்பாணத்தில் 17/MAY/1972 ஆம் ஆண்டில் திரு.திருமதி செபஸ்ரியம்பிள்ளை மேரி வினிபிரட் தம்பதிகளுக்கு பாசமிகு மகளாக கிறிஸ்ரபெல் சிரானி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் ஷாமினி, அன்ரன், தர்சினி, கிருபா, டிலானி, தேவா, பற்றிக் எனும் உடன்பிறப்புகளுடன் சேர்ந்து வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், இன்பமாகவும் வாழ்ந்து வந்தார்.
மேலும் சிரானி என அன்பாக அனைவராலும் அழைக்கப்படும் இவர் கடின உழைப்பாளியாகவும், உறவுகளிடம் பாசத்தை பொழிந்து, வாழ்வில் நேர்மையை கடைபிடித்த இவர் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணமும் கொண்டு விளங்கினார்.
இவ்வாறு சகோதரங்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 28.10.2019 இல் 47 வயதில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஆனைக்கோட்டையில் இறையடி எய்தினார்.
முழுக் கதையையும் வாசிக்க
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

