31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கார்த்திகா செல்வானந்தன்
வயது 2711 ஆகஸ்ட், 1988 – 5 ஜூன், 2016
- பிறந்த இடம்
- ஜேர்மனி
- வாழ்ந்த இடம்
- Coventry
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Coventry ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகா செல்வானந்தன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
கணவன் செல்வானந்தன் புலம்பல்
சத்தியம் காத்து வாழ்ந்த
சத்திய சொரூபவதியே - என்
புத்தியும் பேதலித்து
புத்திரருடன் நானும் இங்கு
விதி விழி வலிது என்று
மதி வழியும் தோற்றுப் போக
நாளும் பொழுதும் நாம்
வாடுகின்றோம் என் நினைவுகளால் துவண்டு.
மகள் டிலக்ஷி புலம்பல்
எழு நிலா பிறை நிலாவும்
ஏழு வயது அழகு நிலாவும் ஆன டிலக்ஷியும்
கண்ணீர்துளிகளுடன் தாயைப் பிரிந்த கன்றதுவாய்
அழுது புலம்புகின்றாள் அம்மா.. அம்மா வென்று
மகன் டிலக்ஷன் புலம்பல்
நாலும் தெரியாத நான்கு வயது பாலகனின்
உரும் திருவுமாகி டிலக்ஷன்
பாலூட்டி தாலாட்டி அமுதூட்டி அரவணைத்த தாயின் முகத்தைத்
தேடும் சேயாகி வாட்டமுறும் டிலக்ஷன்
என்றும் உன் பிரிவால் துயருறும் செல்வானந்தன்(கணவர்),
டிலக்ஷி, டிலக்ஷன்(பிள்ளைகள்),
தருமரட்ணம்(அப்பா), விஜயலட்சுமி(அம்மா),
கார்த்தீபன், சுகனியா(சகோதரர்கள்)
அன்னார் இறைவனின் திருப்பாதங்களில் சங்கமம் அடைந்தவேளையில் நாம் துயருற்று இருந்தபோது எங்கள் இல்லங்களுக்கு நேரிலும், தொலைபேசி மூலம் அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும், அவரது திருவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பொழுது மலர்வளையங்கள் சாத்தியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள் வைத்தவர்களுக்கும், பார்வை நிகழ்வு மற்றும் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டு அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், சகல வழிகளிலும் எமக்கு உதவி ஒத்தாசை புரிந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவரது அந்தியேட்டிக்கிரியை 03-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் 2 Mitchinson Walk, Coventry, CV6 7PL, UK என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். இந்நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
— கணவர், பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

