ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்ணில்6 செப்டம்பர், 1938
விண்ணில்25 ஜனவரி, 2018
காசிப்பிள்ளை பாலசிங்கம் அவர்களின் படம்

காசிப்பிள்ளை பாலசிங்கம்

வயது 79, மாங்குளம் அரசினர் வைத்தியசாலையில் பணிபுரிந்து இளைப்பாறியவர்

பிறந்த இடம்
கந்தர்மடம்
வாழ்ந்த இடம்
வவுனியா, மாங்குளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, மாங்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காசிப்பிள்ளை பாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

மீசை வைத்த ஆண் தேவதை

மீசை வைத்த
ஆண் தேவதையொன்றால்,
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் நாங்கள்

உங்களை மீண்டும்
வயிற்றில் சுமக்க,
உயிரியல் காரணங்கள்
ஒத்துழைக்கவில்லை - ஆதலால்,
நெஞ்சில் சுமக்கிறோம்

எங்கள் சாதனைகளை
உரிமைகொள்ள,
பலர் உள்ளபோதும்,
சோதனைகளை முறியடிக்கும்
சூட்சுமம் சொல்லித்தந்தவர் நீங்கள்!

துன்பங்களை சிரிப்பைக்
கொண்டே துரத்தலாம்!
எனும், புதிய நுட்பத்திற்கான
காப்புரிமை உங்களிடம்
மட்டுமே உள்ளது

எங்கள் பாதங்கள்
பயணிக்கும் பாதைகளின்
முட்களை உங்கள்
பாதங்களால் ஒத்தி
எடுத்தவர் நீங்கள்

உங்கள் மீசை
கறுத்திருந்த காலங்களில்…
ஒரு முறைப்பிற்குள்- உங்கள்
சிரிப்பை சிறைவைத்திருந்தீர்கள்

எங்கள் மீசை
அரும்பிய காலங்களில்…
அவை அதிசய சிரிப்பாய்
அவதாரம் எடுத்தது

உங்கள் கடைசி இருப்பில்
ஞாபகங்கள்
தொலைந்து போனது
ஆனால், நீங்கள்
மறந்து போன“ஞாபகங்களே”
“நாங்கள்” தான் அப்பா!
சேற்றில் இறங்கி– எங்களுக்காய்,
நாற்றுநட்ட, நீங்கள்,
அறுவடையின் போது
மட்டும் அடங்கிப்போனது எப்படி?

உங்களை எதிரில்
பார்த்த, நாட்கள்
தந்த சந்தோஷங்கள் எல்லாம்,
உங்களை எதிர்பார்த்திருக்கும்
இந்த நாட்களின்
வலியால் தோற்கடிக்கப்பட்டுவிட்டது.

அப்பா !நாங்கள் இன்னும் - பல
இளவரசர்களை காணக்கூடும்!
ஆனால், நீங்கள் தான் எங்களுக்கு
எப்போதும் “அரசன்!”

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 25 ஜனவரி, 20202ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 25 ஜனவரி, 20213ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.