1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Karthiga Selvananthan
Age 27August 11, 1988 – June 5, 2016
- Born in
- Germany
- Lived in
- Coventry
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Coventry ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகா செல்வானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நாளும் பொழுதும் வாடாத
உன் வாசமதை இன்னும் நான் நுகர்ந்தபடி
ஊழும் கோளும் எமைப்பிரித்தாலும்
என் மனதில் குடியிருக்கும்
என்றும் பிரிக்க முடியாதவளாய் நீ!
உன் பிரிய செல்வங்கள் இரண்டும்
அம்மா அம்மா என்று அலைமோதினாலும்
அலை மோதா சிலையழகாய்
கலை அழகாய் கல்வியொரு நல் இயல்புகளையும்
பாரில் உள்ளோரும் புகழ எம் செல்வங்கட்கும்
வாரி வழங்குவேன் நான் - இன் இனிய
கார்த்திகாவே தாரிகையே கண்ணுறங்கு! கண்ணுறங்கு!!
தடவியப்படி ஓடிக்கொண்டிருக்கும்
புகைவண்டித் தொடராய்
உனையும் அம்மா அம்மா என்று
கூறி அழைத்தபடி ஓடிக்கொண்டிருக்கிறது!
உன் குழந்தைகளின் வாழ்க்கை
சும்மா சொல்லக்கூடாது தாங்களும்
அம்மாவின் ஆசைப்படி வாழ்த்தும் மலர்ந்தும்
உலர்ந்தும் வரலாறாகியும் நிற்போம் என்கிறார்கள்!
நீங்காத உன் நினைவுகளையும் சுமந்தபடி
கணவரும், டிலக்சியும், டிலக்சனும்
அன்னாரின் திதி 27-05-2017 சனிக்கிழமை அன்று பி.ப 12:30 மணியளவில் No. 02, Mitchinson Walk, Coventry, CV6 7PL, UK என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
— கணவர், பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

