1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Premsuthakar Vithushan
Age 18July 21, 1998 – April 3, 2017
- Born in
- Trincomalee
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபிரான்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிறேம்சுதாகர் விதுஷன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு மொழி பேசி!
ஆசையுடன் அருகமர்ந்த
அன்பு மகனே- நீ!
பிறந்த போது அடைந்த
மகிழ்ச்சியையும் தேடிய புகழ்ச்சியையும்
வாரிச் சுருட்டிக் கொண்டு
கூற்றுவனின் கரம் கோர்த்துச் சென்று
ஆண்டொன்று ஆனதடா!
சீரான உன் வாழ்வதனை
சீரழித்த பாவியர்க்கு
ஜனனத்தின் பரிசாக- உன்
ஆயுளையும் சேர்த்து
நீடூழி வாழ்கவென்று
விலை மதிக்க முடியாத உன்
உயிரைக் கொடுத்தாயடா!
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும் உன்
நிலவு முகம் தேயாதடா!
நீங்கா நினைவுகளுடன்
கண்ணீர் மல்க வேண்டி நிற்கிறோம்!
ஆண்டவன் பாதத்தில்
அமைதி கொள்வாய் அன்பு மகனே!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

