1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Rexsan Anthonipillai
Age 38October 28, 1976 – February 26, 2015
- Born in
- யாழ் சக்கோட்டை
- Lived in
- Vettilaikeni, Barking
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Barking ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த றெக்ஸன் அந்தோனிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வரமென்று கிடைத்தாய் - நாம்
வளம்பெற உழைத்தாய்
கரம் கோர்த்தாய்- நட்பெல்லாம்
களிப்படையச் செய்தாய்
பரம் நோக்கிச் சென்றாயோ
பரமனை மகிழ்விக்க?
உரம் இல்லை ஐயா- இங்கு
உனைப் பிரிந்து வாழ்வதற்கே!
ஓய்வின்றிச் சுழல்வாய்- அட
ஒருபோதும் உறங்காய்
தாய் போல பிள்ளைகளை
தழுவித்தான் மகிழ்வாய்
பாய் போட்டு படுக்கவைத்து
பார்த்தபடி இருப்பாய்
வாய் நோக புலம்பியென்ன
வந்தவழி சென்றாய்
சிலை போல நீயிருந்தாய்
சிரிப்புக்கு பஞ்சமில்லை
நிலை மீறிப் போகவில்லை
நித்தம் ஒரு குறையுமில்லை
தலை போல இருந்ததனால்
தடுமாற்றம் ஏதுமில்லை
விலைபேசி வந்த நோயோ?
விட்டுச்சென்றது ஏதுமில்லை
நீயில்லை நிழலில்லை
நினைவினிலே எதுவுமில்லை
பாயில்லை படுக்கையில்லை
பரிமாற நாதியில்லை
வாயில்லை வாழ்த்தில்லை
வந்த துன்பம் நீங்கவில்லை
சேயில்லை செல்வமில்லை
சொல்லியழ வார்த்தையில்லை!
அன்னாரின் மறைவிற்கு பின்னர் கடந்த ஒரு வருட காலமாக எங்கள் குடும்பத்திற்கு பல வழிகளிலும் உதவியாகவும், ஆதரவாகவும், ஆறுதலாகவுமிருந்து ஆற்றித் தேற்றி அரவணைத்து வந்த அன்பான உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் எங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
— அம்மா, மனைவி, பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

