1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
றெக்சன் அந்தோனிப்பிள்ளை
வயது 3828 அக்டோபர், 1976 – 26 பிப்ரவரி, 2015
- பிறந்த இடம்
- சக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- வெற்றிலைக்கேணி, Barking
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Barking ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த றெக்ஸன் அந்தோனிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வரமென்று கிடைத்தாய் - நாம்
வளம்பெற உழைத்தாய்
கரம் கோர்த்தாய்- நட்பெல்லாம்
களிப்படையச் செய்தாய்
பரம் நோக்கிச் சென்றாயோ
பரமனை மகிழ்விக்க?
உரம் இல்லை ஐயா- இங்கு
உனைப் பிரிந்து வாழ்வதற்கே!
ஓய்வின்றிச் சுழல்வாய்- அட
ஒருபோதும் உறங்காய்
தாய் போல பிள்ளைகளை
தழுவித்தான் மகிழ்வாய்
பாய் போட்டு படுக்கவைத்து
பார்த்தபடி இருப்பாய்
வாய் நோக புலம்பியென்ன
வந்தவழி சென்றாய்
சிலை போல நீயிருந்தாய்
சிரிப்புக்கு பஞ்சமில்லை
நிலை மீறிப் போகவில்லை
நித்தம் ஒரு குறையுமில்லை
தலை போல இருந்ததனால்
தடுமாற்றம் ஏதுமில்லை
விலைபேசி வந்த நோயோ?
விட்டுச்சென்றது ஏதுமில்லை
நீயில்லை நிழலில்லை
நினைவினிலே எதுவுமில்லை
பாயில்லை படுக்கையில்லை
பரிமாற நாதியில்லை
வாயில்லை வாழ்த்தில்லை
வந்த துன்பம் நீங்கவில்லை
சேயில்லை செல்வமில்லை
சொல்லியழ வார்த்தையில்லை!
அன்னாரின் மறைவிற்கு பின்னர் கடந்த ஒரு வருட காலமாக எங்கள் குடும்பத்திற்கு பல வழிகளிலும் உதவியாகவும், ஆதரவாகவும், ஆறுதலாகவுமிருந்து ஆற்றித் தேற்றி அரவணைத்து வந்த அன்பான உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் எங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
— அம்மா, மனைவி, பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

