4ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thampu Muthukkirusnan
Age 84September 25, 1928 – April 12, 2013
- Born in
- யாழ் உடுப்பிட்டி
- Lived in
- Kilinochchi, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, வறுத்தலைவிளான், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பு முத்துக்கிருஸ்ணன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா !
உண்மை ஊக்கம் உழைப்புக் கொண்டே
வாழ்வில் உயர்வு கொண்ட அப்பா
சற்றும் அயர்வு இல்லாது உழைத்து
சாதனை படைத்த அப்பா
வல்லமை கொண்டு குடும்ப வாழ்வில்
வளங்கள் பெருக்கிய அப்பா
எங்கள் அப்பா !
கடந்த காலம் பழகி வந்த
காட்சி மறக்கவில்லை
கண்ட காட்சிகளிலே தனிப்
பக்குவம் கண்டோம் நாம்
வேறுபட்டு வேறுபட்டு
வாழ்வோர் எல்லோரும்
சாறு இல்லா வாழ்வைத் தானே
சார்ந்து நிற்பாரோ
ஒன்றி வாழும் தன்மை மறந்து
விலகி வாழ்ந்தாலே
ஒன்றும் நன்மை காண மாட்டோம் என்ற
உண்மை உணர்த்தி உள்ளீர்கள்
பண்பால் உயர்ந்த அப்பா !
அன்பு இரக்கம் கொண்டோர் மட்டும்
உயர் குடிப்பிறப்பாவார்
நன்மை ஒன்றே செய்வோர் எல்லாம்
நல்ல குடியாவார்
நல்ல குடிப் பிறந்தோர் எல்லாம்
மண்ணுலகம் விட்டு அந்த
வானுலகம் சென்றங்கு
விண்மீனாய் ஆகின்றார்
விண்வெளியைப் பார்க்கின்றோம்
விண்மீனாய்க் காண்கின்றோம்
வானம் உள்ளவரை
என்றென்றும் காண்போம் நாம்
மனைவி, பிள்ளைகள்(பவானி, ரதி, ஈசா, கேசா, அம்பிகா, சாந்திமதி),
மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

