2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நற்குணநாதன் புஸ்பதேவி
வயது 5215 ஆகஸ்ட், 1961 – 4 ஜூன், 2014
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- Atchuvely, Burgdorf
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகம் பருத்திக்கலட்டியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, சுவிஸ் Burgdorf ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புஸ்பதேவி நற்குணநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
புன்னகை தவழும் முகம்
புதுமைகள் காட்டும் திறம்
உறவினைக் காக்கும் குணம்
ஆபத்தில் உதவும் கரம்
அயராது உழைக்கும் மனம்
உறவுகளை மறந்ததில்லை ஓர் கணம்!
மருந்துக்கும் கண்டதில்லை சினம்
தலையில் நீ கொண்டதில்லை கனம்
அத்தனையும் உன்னிடத்தில் நாம் கற்ற பாடம்!
எப்படி நாம் மறந்திடுவோம் உன் நினைவை?
எம் வீட்டின் தலை மகளாய் நிலைத்திருந்தாய்
வருடங்கள் பலநூறு போனாலும் நாம் மறவோம்!
நேற்று நீ இருந்தது போல் ஓருணர்வு
வந்து வந்து ஆட்டுது எம் மனதை இங்கு
எமதருமை தெய்வமே உன் நினைவால் வாடுகின்றோம்
நித்தியத்தில் இறையடியில் சேர்ந்திருந்து
இறைபாதம் இறைஞ்சுகின்றோம்.
சாந்தி!!!... சாந்தி!!!
உன் பிரிவால் துயருறும் உன் குடும்பத்தவர்,
உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

