1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பு முத்துக்கிருஸ்ணன்
ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்
வயது 8425 செப்டம்பர், 1928 – 12 ஏப்ரல், 2013
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, வறுத்தலைவிளான், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பு முத்துக்கிருஸ்ணன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா!
உண்மை ஊக்கம் உழைப்புக் கொண்டே
வாழ்வில் உயர்வு கொண்ட அப்பா
சற்றும் அயர்வு இல்லாது உழைத்து
சாதனை படைத்த அப்பா
வல்லமை கொண்டு குடும்ப வாழ்வில்
வளங்கள் பெருக்கிய அப்பா!!
எங்கள் அப்பா!
கடந்த காலம் பழகி வந்த
காட்சி மறக்கவில்லை
கண்ட காட்சிகளிலே தனிப்
பக்குவம் கண்டோம் நாம்
வேறுபட்டு வேறுபட்டு
வாழ்வோர் எல்லோரும்
சாறு இல்லா வாழ்வைத் தானே
சார்ந்து நிற்பாரோ
ஒன்றி வாழும் தன்மை மறந்து
விலகி வாழ்ந்தாலே
ஒன்றும் நன்மை காண மாட்டோம் என்ற
உண்மை உணர்த்தி உள்ளீர்கள்
பண்பால் உயர்ந்த அப்பா!
அன்பு இரக்கம் கொண்டோர் மட்டும்
உயர் குடிப்பிறப்பாவார்
நன்மை ஒன்றே செய்வோர் எல்லாம்
நல்ல குடியாவார்
நல்ல குடிப் பிறந்தோர் எல்லாம்
மண்ணுலகம் விட்டு அந்த
வானுலகம் சென்றங்கு
விண்மீனாய் ஆகின்றார்
விண்வெளியைப் பார்க்கின்றோம்
விண்மீனாய்க் காண்கின்றோம்
வானம் உள்ளவரை
என்றென்றும் காண்போம் நாம்
உங்கள் பிரிவால் துயறுரும் மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
எரும மாடு தண்டச்சோறு
ஊர்சுத்திக்கழுத என்று வகைவகையாய்
வாய்க்கு வந்தபடி பட்டம் வைத்துத்திட்டி தீர்த்து
நான் உறங்கியபின் கால்பிடித்து, கைபிடித்து கறுத்துப்போய்விட்டான்
என் புள்ள என்று கைபிடித்து தலைதடவி,
நான் எழும்பும்போது ஒன்றுமே தெரியாததுபோல
ஓரமாகப்போகும்!!
என் அப்பா
கண்முன் இருக்கும் கடவுள்தான்
கேசா, ஈசா(மார்ட்டின்)
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
- 12 ஏப்ரல், 2013மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
- 31ஆம் நாள் நினைவஞ்சலி · 11 மே, 201331ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
- ஆண்டு நினைவஞ்சலி · 10 ஏப்ரல், 20152ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
- ஆண்டு நினைவஞ்சலி · 11 ஏப்ரல், 20163ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
- ஆண்டு நினைவஞ்சலி · 11 ஏப்ரல், 20174ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

